Kodaikanal: கொடைக்கானல் செல்வதற்கு விருப்பமா? கொடைகானல் பற்றிய தற்போதைய செய்திகள் தெரிந்துகொள்ளுங்கள்..!

  

கொடைக்கானல் பகுதிக்கு சில சுற்றுலா பயணிகள் E-pass பெற்று கடந்த சில நாட்களாக வர தொடங்கியுள்ளனர்.

கொரோனா தொற்று தமிழகத்தில் இருந்த காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்திருந்தது, தற்போது கொரோனா தொற்று தமிழகத்தில் சற்று குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

கொடைக்கானலில் உள்ள சில முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் கொடைக்கானலில் உள்ள கிராம பகுதிகளான மன்னவனூர் ஏரி, கூக்கால் ஏரி உள்ளிட்ட ஏரிகளையும், மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட மலை பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் கொடைக்கானல் நட்சத்திர ஏரியை (Kodaikanal lake) சுற்றி குதிரை சவாரி மற்றும் சைக்கிள் சவாரியை சுற்றுலா பயணிகள் மேற்கொண்டு வருகின்றனர்,

கொடைக்கானலில் அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் இதமான சீதோஷனை நிலையை அனுபவித்தவாறும் மேக கூட்டங்களிடையே செல்பி எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகையால் சுற்றுலா பகுதிகளில் கடைகள் மற்றும் தங்கும் விடுதி வைத்துள்ளார் சற்று மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.


இதனிடையே தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரையண்ட் பூங்கா,செட்டியார் பூங்கா, மற்றும் ரோஜா பூங்கா இன்று முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவதாகவும், மேலும் தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் 50% பயணிகள் மட்டும் அனுமதிக்கபடுவார்கள் என்று தோட்டக்கலை துறை துணை இயக்குனரான சீனிவாசன் அவர்கள்தெரிவித்துள்ளார்.

பூங்காக்களுக்கு உள்ளே அனுமதிக்கும் பயணிகளுக்கு கட்டாயமாக உடல் வெப்பமானி பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பயணிகள் அனைவரும் கட்டாயமாக தனிநபர் இடைவெளி மற்றும் பொதுமக்கள் முகாகவசம் அணிந்து கடைபிடிக்க வேண்டும் என பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. முதல் கட்டமாக பூங்காக்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளதால் சுற்றுலாதலங்களில் தொழில் புரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துகள்